பாஜக தலைவர்களின் உருவப்படங்களை கிழித்து மாணவர்கள் ஆர்பாட்டம்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

News18
Last Updated:
February 28, 2020, 3:53 PM IST

Share this:

மோகன் பாகவத், கோல்வாக்கர், மோடி, அமித்ஷா ஆகியோரின் உருவப்படங்களை கிழித்தெறிந்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கடந்த 24-ம் தேதி போராட்டத்தின் போது குடியுரிமை திருத்த சட்டத்தின் எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் தற்போதுவரை 41 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கலவரத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைப் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான மோகன் பகவத்  மற்றும் கோல்வாக்கர் ஆகியோரின் உருவப்படங்களை கிழித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சேர்த்த மாணவர் முருகன் பேசுகையில் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்கள் மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.Also see…[embedded content]

First published: February 28, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/madras-university-apsc-students-staged-a-protest-against-delhi-violence-in-anti-caa-protest-vin-260561.html