15 நாள்களுக்கு சென்னையில் போராட்டம் நடத்த தடை! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

விஸ்வநாதன்

Share this:

சென்னையில் எந்த அரசியல் கட்சிகளுக்கும், அமைப்பினருக்கும் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னையின் வண்ணாரப்பேட்டைப் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுகூட்டம் உள்ளிட்டவை நடத்த அரசியல் கட்சியி மற்றும் அமைப்புக்கு அடுத்த 15 நாட்களுக்கு காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் சுற்றிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.குறிப்பாக வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, ராஜரத்தினம் மைதானம் போன்ற இடத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டம் போட்ட கட்சியினர் மற்றும் அமைப்புகளுக்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 28-ஆம் தேதி இரவு முதல் மார்ச் 14 ஆம் தேதி இரவு வரை அனுமதி மறுக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.ஆனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் நடக்ககூடிய மதம் சார்ந்த நிகழ்ச்சி, திருமண ஊர்வலம், மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம் என காவல் ஆணையர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.Also see:[embedded content]

First published: February 28, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-city-commissioner-denied-permission-for-protest-for-upcoming-15-days-skd-260813.html