சென்னை வந்தார் ‘தல’ தோனி: ரசிகர்கள் உற்சாகம் – வீடியோ! – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் கேப்டன் ‘தல’ தோனி நேற்று இரவு சென்னை வந்தார்

2020-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ உட்பட 8 அணிகள் பங்கேற்கும் 60 போட்டிகள் கொண்ட இந்த ஐபிஎல் தொடர் மே மாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது.

image

இந்தப் போட்டிக்கான பயிற்சியை இரு அணி வீரர்களும் விரைவில் தொடங்கவுள்ளனர். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில், ஒவ்வொரு வீரராக சொந்த மண்ணான சென்னைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். நேற்று மாலை அம்பத்தி ராயுடு சென்னை வந்தார். இந்நிலையில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் கேப்டன் ‘தல’ தோனி நேற்று இரவு சென்னை வந்தார்.

இண்டிகோ உணவகத்தில் அசைவம் மறுக்கப்பட்டதாகப் புகார்

image

அவரது வருகையையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் தோனி வருகையை கொண்டாடி வருகின்றனர். தோனி வருகையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

[embedded content]

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/65541/Dhoni-reached-chennai-for-IPL-2020