சென்னை மீனம்பாக்கத்தில் ஆர் டி ஒ அலுவலகம் அமைக்க கோரி வழக்கு.. பரிசீலிக்க ஹைகோர்ட் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மீனம்பாக்கத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆர் டி ஒ அலுவலகம் அமைக்க கோரிய வழக்கில், 2 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாமல், பாழடைந்த நிலையில் இருந்தன் காரணமாக மீனம்பாக்கத்தில் இயங்கி வந்த ஆர்டிஒ அலுவலகம் ஆலந்தூர் பகுதிக்கு மாற்றப்பட்டதோடு, வாகங்களுக்கான உரிமம் பெற ஓட்டுனர் சோதனை நடத்தப்படும் திடலுக்காக 0.32 ஹெக்டேர் நிலமும் ஒதுக்கப்பட்டுருந்தது.

ஆனால் இந்த நிலத்தில் ஆலந்தூரில் ஆர் டி ஓ அலுவலகத்திற்கான புதிய கட்டிமோ, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளோ ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை, இதனால் வாகன உரிமம் பெற வருபவர்கள் சிரமத்திற்குள்ளாவதோடு, திறந்த வெளி திடலிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

எனவே அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆர்டிஒ அலுவலகத்தை ஆலந்தூரில் கட்டிட தர கோரி மகாத்மா காந்தி மனித நேய மக்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது

இந்த வழக்கை.விசாரித்த நீதிபதி எம் எம் சுந்தரேஸ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, 2 மாதத்தில் மனுதாரர் அளித்த மனுவின் மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்ததவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/high-court-order-to-tn-govt-consider-to-set-up-rto-office-ib-chennai-meenampakkam-378628.html