கோடை தொடக்கம்: சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ ‘ பாதிப்பு | Rise in incidence of Madras Eye in Chennai – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

சென்னையில் மெட்ராஸ் ஐ அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் சென்னையில் சுமார் 850 பேர் இந்த கண் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெட்ராஸ் ஐ என்பது அடினோ வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பல வகைப்படும். கண்ணின் வெண்படலத்தில் ஏற்படும் வீக்கம்தான் கண் நோய். இது வெளியில் உள்ள வெப்பநிலைக்கு ஏற்றவாறு அதிகம் பரவும். குறிப்பாக கோடைக் காலங்களில் இதன் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த வைரஸ் பாதித்தால் பொதுவாக இருக்கக்கூடிய அறிகுறிகள் கண்ணீர், கண் இமைகள் மீது படலப்பூச்சாக மாறுகிற அடர்த்தியான, மஞ்சள் நிறத்திலான வெள்ளைக்கழிவு வெளிப்படும்.

image

தொற்று பாதிப்புள்ள நபருக்கு கண்களில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படலாம். மங்கலான பார்வையும் அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும், வலி உணர்வும் இருக்கக்கூடும். இந்த நோயானது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை நீடிக்கக் கூடும் மற்றும் அதன் பிறகு தானாகவே பாதிப்பு சரியாகி விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் சைக்கிளை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லலாம் – சென்னை மெட்ரோவின் அசத்தல் அறிவிப்பு

இது குறிப்பிட்ட மக்களைத்தான் பாதிக்கும் என இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் இந்த வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளை இது அதிகளவில் தாக்கக்கூடியது. பள்ளியில் சக மாணவர்களோடு விளையாடும்போதோ, அல்லது அவர்கள் அடிக்கடி சென்று வருகிற பிற இடங்களிலோ இந்த நோய்த் தொற்று அவர்களை எளிதில் பாதிக்கிறது.

image

பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து வரக்கூடிய நீரை தொடும்போது அதை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அதிலிருந்து பிறருக்கு பரவக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கண் நோய் பொதுவாக ஒரு வாரம் வரை நீடிக்கும் என்றாலும் அடினோ வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தால் மூன்று மாதங்கள் வரை கூட நீடிக்கக் கூடும்.

இதுபோன்று கண் தொற்று ஏற்பட்டால் சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/65720/Rise-in-incidence-of-Madras-Eye-in-Chennai