கொரோனா.. நோயாளிகளுக்கு சிகிச்சை தர சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. மத்திய அரசு திட்டம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கிய நபர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வசதியாக சென்னை உட்பட ஐந்து நகரங்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

image

Corona Virus in Tamilnadu | Trichy Government Hospital

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

இவர் கடந்த சில வாரங்கள் முன் தாய்லாந்து மற்றும் மலேசியா சென்று திரும்பி உள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டு இருக்கிறது.

imageஎல்லாத்துக்கும் காரணம் அந்த பூனைதான்.. சீனாவிலிருந்து திட்டமிட்டு அனுப்பி.. அதிர வைக்கும் பரபர தகவல்

நோய் தாக்கியவர்கள்

இந்த நிலையில் நோய் தாக்கியவர்கள் எல்லோரையும் தனியாக வைக்க வேண்டியது கட்டாயம். இவர்களுக்கு சிகிச்சை அளித்து அதன்பின் 28 நாட்கள் தனியாக வைத்து இருக்க வேண்டும். அதேபோல் இன்னொரு பக்கம் நோய் அறிகுறி இருக்கும் நபர்களை 14 நாட்கள் தனியாக வைத்து இருக்க வேண்டும். இந்த வைரஸ் 14 நாட்கள் உயிரோடு இருக்கும் என்பதால், நோயாளிகளை தனியாக வைத்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சென்னை தேர்வு

இதற்காக சென்னை, கொல்கத்தா, ஜெய்சால்மர், சூரத்நகர், செகந்திராபாத் ஆகிய 5 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இங்கு மொத்தம் 1500 நோயாளிகள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் சிகிக்சை பெறுவார்கள். இந்திய ராணுவம் மூலம் இந்த முகாம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

ஏன் சென்னை

சென்னையை தேர்வு செய்ததற்கு இதில் நிறைய காரணங்கள் உள்ளது. சென்னை வெயில் அதிகம் உள்ள பகுதி, மற்ற நான்கு நகரங்களும் ஏப்ரலுக்கு பிறகு வெயில் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். கொரோனா வைரஸ் வெயிலில் பெரிதாக தாக்கு பிடிக்காது. அதேபோல் சென்னையில் மருத்துவ வசதிகள் சிறப்பாக இருக்கிறது. இதனால் சென்னை உட்பட 5 நகரங்களை தேர்வு செய்துள்ளனர்.

ராணுவம்தான்

இந்த முகாம் முழுக்க ராணுவம் மூலம் அமைக்கப்படும். ராணுவம் அனுமதிக்கும் நபரை தவிர இதில் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. இங்கு ராணுவ மருத்துவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக பாதுகாப்போடும், கட்டுப்பாடோடும், மருத்துவ வசதிகளோடும் இந்த முகாம் அமைக்கப்பட உள்ளது. தீவிர நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இதற்கு உள்ளே தனிப்பட்ட வார்டுகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-5-cities-selected-for-quarantine-including-chennai-379049.html