சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி ! | Boy travelled from US to Chennai are with corona symptoms – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

image

இதனையடுத்து கொரோனா அறிகுறி உள்ள சிறுவனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்னை விமான நிலைய மருத்துவக் குழிவனர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று ஓமன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அந்த நபரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்த தமிழருக்கு சென்னையில் சிகிச்சை ! 

ஓமனிலிருந்து தமிழகம் திரும்பிய 45 வயது நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகளை சமாளிக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் தன் டவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

image

“காலர் டியூன்” மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு 

கொரோனா பாதித்த நபர் கடந்த 5 நாட்களுக்கு முன் தங்கள் மருத்துவமனைக்கு காய்ச்சலுடன் வந்ததாகவும் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளாகவும் ராஜிவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தாக்கியிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/65978/Boy-travelled-from-US-to-Chennai-are-with-corona-symptoms