Coronavirus Latest News: சென்னை வந்த 44 பேருக்கு கொரோனா அறிகுறி! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

துபாய், அபுதாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 44 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. 24 பேர் 5 ஆம்புலன்ஸ்கள் மூலம் பூந்தமல்லி சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

20 பேர் தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரேசில், ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்தவர்கள் துபாய் வழியாக சென்னை திரும்பியுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையங்கள் வெறிச்சோடிப் போயுள்ளன. பயணிகள் வருகை குறைந்ததால் சென்னையில் இன்று மட்டும் 62 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா: தமிழ்நாட்டில் தாக்கம் எப்படி உள்ளது?

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக கொரோனா இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. stopcoronatn.in என்ற தளத்தில் கொரோனா தொற்று குறித்த விவரங்களை அறியலாம்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவது போல் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. ஏனெனில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தன் கோர முகத்தை காட்டி வருகிறது.

ஈரோட்டில் வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 5 பேருக்கு சிகிச்சை!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் 79 ரயில்களில் சோதனை செய்வது சவால் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் உடல் வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ரயில்வே போலீஸார் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/group-of-people-who-arrived-in-chennai-from-dubai-have-the-corona-symptoms/articleshow/74684302.cms