சென்னை மக்களை வீட்டுக்குள் முடக்கி போட்ட ‘கொரோனா’ – MALAI MURASU

சென்னைச் செய்திகள்

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவும் வைரஸ் என்பதால் கொரோனா வைரஸ் தொடர்பான பீதி சென்னை மக்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடந்த 16-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் மற்றும் நகை கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவும் வைரஸ் என்பதால் கொரோனா வைரஸ் தொடர்பான பீதி சென்னை மக்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக சென்னையில் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போயுள்ளது. குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை நகர சாலைகளில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.. ஆனால் கடந்த சில நாட்களாகவே சாலைகளில் வாகன நெரிசல் இல்லை. மக்கள் நடமாட்டமும் குறைவாகவே உள்ளது. இதனால் சென்னை மாநகர சாலைகளிலும் இயல்பு நிலை மாறிவிட்டது. அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத வேலைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்கிறார்கள்.

கண்னுக்கு தெரியாத எதிரியாக இருக்கும் கொரோனா, வைரஸ் எப்போது, எந்த ரூபத்தில் வரும் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மத்தியில் கொரோனா பீதி தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் வெளியில் வருவதற்கு மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வீடுகளில் முடங்கி கிடந்தாலும் கொரோனா பற்றி தினமும் வெளியாகும் தகவல்கள் சென்னை மக்களிடையே பரபரப்பை அதிகமாக்கியே உள்ளது.

Related Tags :

Source: https://www.maalaimalar.com/news/district/2020/03/20112332/1342011/Coronavirus-chennai-peoples-isolates.vpf