சென்னையில் இன்று ஒரே நாளில் 224 விமானங்கள் ரத்து! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை விமானநிலையம்

  • Share this:
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 224 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஒரு சில விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

உள்நாட்டு விமானங்களில் மிகவும் குறைந்தளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதிலும் பல விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கின்றன.178 போ் பயணம் செய்யக்கூடிய ஒரு ஏா்பஸ் விமானம் சுமாா் 20-க்கும் குறைவான பயணிகளுடன் இயக்கப்படுகிறது. குறிப்பாக டில்லி, மும்பை, கொச்சி விமானங்கள் இதைப்போல் இயக்கப்பட்டுகின்றன.

இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து வரும் 29-ஆம் தேதி வரை சா்வதேச விமானங்கள் இந்தியாவிற்கு வந்து செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று  மலேசியா, இலங்கை, தாய்லாந்து, துபாய், சாா்ஜா, மஸ்கட், தோகா, குவைத், பக்ரைன், ஜெட்டா, ஹாங்காங், ஜொ்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 42 விமானங்களும், அதைப்போலவே சென்னையிலிருந்து அந்த நாடுகளுக்கு செல்லவேண்டிய 42 விமானங்களுமாக மொத்தம் 84 சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதைப்போல சென்னையிலிருந்து டில்லி, மும்பை, பெங்களூா், ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லவேண்டிய 70 விமானங்களும் அதைப்போல் அந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 70 விமானங்களும் மொத்தம் 140 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை விமானநிலையத்தில் 224 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Also see…

[embedded content]


First published: March 21, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-224-chennai-flights-canclled-today-due-to-corona-virus-1-vaiju-270201.html