சென்னை: கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு | Chennai: Denial of permission to go to Beach – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகளின் ஒரு முன்னோட்டமாக நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஒரு சில சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

image

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு 

தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், பயணிகள் ரயில்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

image

கொரோனா முன்னெச்சரிக்கை – கமல் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!! 

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், திருவான்மியூர் உட்பட அனைத்து கடற்கரைகளுக்கும் மக்கள் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/66777/Chennai–Denial-of-permission-to-go-to-Beach