சென்னை, காஞ்சிபுரம் ஓகே… அது என்ன சம்பந்தமே இல்லாம ஈரோடு…? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 2 தாய்லாந்து நாட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்புள்ள தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இங்கு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றது. சென்னையில் கொரோனா பாதித்து 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் சிகிச்சை பெற்று பின்னர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்.சென்னைக்கு வெளியே, நேற்று காலை கோவையில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும், ஈரோடு மாவட்டம் ஏன் மத்திய அரசின் பட்டியலில் வந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் புதிய கேஸ்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

ஈரோட்டுக்கு கடந்த 11-ம் தேதி -தாய்லாந்தை சேர்ந்த 7 பேர் வந்துள்ளனர். அவர்கள் கொல்லம்பாளையத்தில் தங்கியிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கடந்த 16-ம் தேதி ஊருக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து  இந்த ஆறு பேர் பற்றிய விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது அதைத் தொடர்ந்து அந்த 7 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

அவர்களுடைய இரத்த மாதிரிகள்  ஆய்வு செய்ததில் இருவருக்கு  கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரும் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் இன்று பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


[embedded content]

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/coronavirus-chennai-kanchipuram-erode-under-lockdown-minister-explains-why-erode-san-270755.html