உணவுப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய தடை!- – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று (25/03/2020) மாலை 06.00 மணியுடன் டீ கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் மாலை 06.00 மணியுடன் டீ கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளுடன் மளிகை பொருள், காய்கறி மட்டுமே ஹோம் டெலிவரி செய்ய அனுமதி. சமைத்த உணவுகளை வீடுகளுக்கு விநியோகம் செய்ய ஆன்லைன் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், சாம்பார், ரசப்பொடி, முகக் கவசங்கள், கிருமி நாசினி, நாப்கின், கைகளைக் கழுவும் திரவங்கள் உள்ளிட்ட பொருட்களை சென்னை மாநகராட்சியிடம் அளிக்கலாம்.

சென்னை கீழ்பாக்கத்திலுள்ள ஜெ.ஜெ.விளையாட்டு அரங்கம், அண்ணா கிழக்கிலுள்ள அம்மா அரங்கத்தில் பொருட்களை வழங்கலாம்.” இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/online-food-delivery-chennai-corporation-circular