லாக்டவுன்.. கை கோர்க்கிறது சென்னை.. இலவச உணவு, மருந்து வழங்க இளைஞர்கள் ரெடி.. இதோ தொலைபேசி எண்கள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: 2015ம் ஆண்டு, சென்னை பெரு வெள்ளம் நினைவில் இருக்கிறதா? சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்ய, மற்றொரு பக்கம் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திடீரென வெளியேற.. இப்படியாக பெரும் வெள்ளத்தின் இடையே சென்னை சிக்கி திண்டாடியது. ராணுவம் களத்திற்கு வந்து உணவு பொட்டலங்களை போடும் நிலைமை ஏற்பட்டது.

அதேபோன்ற நிலைமைதான் இப்போதும். அப்போதும் வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியவில்லை, இப்போதும் வர முடியவில்லை. முன்பு வெள்ளம் என்றால், இப்போது அதற்கு பதில் இப்போதும் ஒரு இயற்கை பேரிடர். அதன் பெயர் கொரோனா வைரஸ்.

இன்னும் 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என இன்று அதிகாலை 12 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், எப்போதெல்லாம் இயற்கை சீறுகிறதோ, அப்போதெல்லாம், தமிழ் மக்களின் கருணை உள்ளம் பொங்கும். இப்போதும் அதுதான் நடந்துள்ளது.

சென்னை வெள்ளத்தின்போது அரசு உதவிகள் காலதாமதமாக கிடைத்தன. அப்போது மக்கள் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறி உதவினர். இப்போதும், உடனே கைகோர்த்துள்ளனர், சமூக ஆர்வலர்கள்.

அதுபற்றிய ஒரு தொகுப்பு:

சென்னையில் இப்போது தனியாக வசிக்கும் முதியவர்கள் உங்களுக்கு உண்ண உணவு, அவசரமான மருந்துகள் எதுவும் தேவையெனில் உடன் கீழ்கண்ட

இதோ சில தன்னார்வலர்கள்:

1. அத்வைத் சிவரம்

வளசரவாக்கம்

7358516184

2. ஜே எஸ் சேகர்

சாலிகிராமம் / அசோக்நகர்

+91 98400 47101

3. வீரமணி ராஜு

வளசரவாக்கம்

9841068548

4. ஸ்ரீராம்

கோடம்பாக்கம்

9840079929

5. நான்சி

கொளத்தூர்

+91 89254 04028

6. வினோத்

குரோம்பேட்டை

9551305656

7. மோசஸ் ராபின்சன்

பல்லாவரம்

9600143138

உங்களில் யாராவது தன்னார்வலராக சேர விரும்பினாலும் இவர்களை தொடர்பு கொள்ளுங்கள். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே உணவு சப்ளை செய்யப்பட வேண்டும். இப்படி போகிறது அந்த மெசேஜ்.

மற்றொரு பக்கம், சென்னையில் சாப்பாடு கிடைக்காத பேச்சுலர்கள், கையில் பணம் இல்லாமல் தவிப்பவர்கள் என அனைத்து தரப்புக்கும், இலவச உணவு வழங்குவதாக மகிழ்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அவர்களின் வாட்ஸ்அப் எண்: 6380679597

Source: https://tamil.oneindia.com/news/chennai/if-you-need-free-food-or-medicine-in-chennai-contact-380795.html