பிளிப்கார்ட், அமேசான், பிக்பாஸ்கெட் இயங்கும் – சென்னை மாநகராட்சி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்

  • Share this:
ஆன்லைனில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பிக் பாஸ்கெட் இயங்கத் தடையில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் மக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் தங்கு தடையிடி கிடைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுப் பொருட்களை டெலிவரி ஆன்லைன் நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சமைத்த உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே தடை உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக பிளிப்கார்ட்,அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் நாடு முழுக்க இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சில இடங்களில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது தடியடி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பாதுகாப்பாக வழங்க அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.



சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: March 26, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/no-barrier-on-online-food-products-delivery-chennai-corporation-vjr-272153.html