சென்னையில் 24,000 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை.. யாரும் அங்கே போகக்கூடாது: ஜெயக்குமார் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

image

Director / Actor Ameer about #stayhomestayconnected

சென்னையில் இன்று நிருபர்களிடம் ஜெயக்குமார் பேசியதாவது: அரசு எடுத்த நடவடிக்கைகள் முழுமையாக மக்களை கிராம் அளவில் சென்று சேர்கிறது என்பது ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது.

மக்களைப் பொறுத்தவரை நாம் இந்த தாக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று சொன்னால், முதலில் அரசின் அறிவுரைகளை, நாம் பின்பற்ற வேண்டும்.

imageகொரோனா.. இந்தியாவில் வேகம் எடுக்கும் ‘க்ளஸ்டர்’ பரவல்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை.. முழு பின்னணி

பிரதமர்

முதல்வர் சொல்வது போல, வீட்டில் இருந்து விலகியிருங்கள், விழிப்போடு இருங்கள், இது ரொம்ப ரொம்ப மிக மிக அவசியமான ஒன்று. நமது ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முயற்சி எடுக்கின்றனர். இதற்கு முழு ஒத்துழைப்பு தருவது மூலமே இதை நாம் நிச்சயமாக எதிர்கொள்ள முடியும். நம் நாட்டை பொறுத்தவரை பிரதமர் அவ்வப்போது தொலைக்காட்சியில் தோன்றி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதை தெரிவிக்கிறார்.

நோய் ஒழிப்பு

தமிழக முதல்வர் ஒரு உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் கொண்ட குழுவை ஏற்படுத்தி, நிலையை சீர்படுத்த செய்கிறார். ஏற்கனவே பெரியம்மை மற்றும் இளம்பிள்ளைவாதம் ஆகியவற்றை, இந்தியா அறவே இல்லாமல் சீர் செய்துள்ளது. எனவே இநதியாவும் சரி, தமிழ்நாடும் சரி எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்வதற்கு அத்தனை திறனையும் கொண்டுள்ளது.

24 ஆயிரம் பேர்

அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல், அவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தல் ஆகிய மூன்றுமே முக்கியமான விஷயங்கள். தமிழகம் முழுக்க, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்கள் கடமையை செய்கிறது. சென்னை மாநகராட்சியில், 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

வீட்டுக்கு போகக்கூடாது

கொரோனா தாக்குதலின் சந்தேகத்துக்கிடமானவர்கள் வசிக்கக்கூடிய இல்லம், இங்கு யாரும் வரவேண்டாம் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளோம். குடிசை பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி போன்றவற்றில், இயந்திரங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பவர் ஸ்பிரே மூலமாகவும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக உருவாக்கப்பட்ட ட்ரோன் மூலமாக சோதனை அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/update-for-chennai-more-than-24-000-people-in-quarantine-says-minister-jayakumar-381026.html