கொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து? – ஆய்வுகள் நடப்பதாக அரசு பதில் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கொரோனா உள்ளிட்ட எல்லா…
WebDesk
March 30, 2020 07:35:56 pm 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

[embedded content]
அந்த மனுக்களில், கொரோனாவுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் இந்நோயை பரிபூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது – ஐகோர்ட்

சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கொரோனா உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டுவிடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர், அவரவர் வீடுகளில் இருந்தவாறு ஸூம் செயலியை பயன்படுத்தி வீடியோ கால் மூலம் விசாரித்தனர்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்க விருப்பமா? – ஸ்டெப்ஸ் இதோ

கொரோனாவை சித்த மருத்துவம் உள்ளி்ட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையி்ல் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள். இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-medicine-from-siddha-research-tamil-nadu-govt-madras-high-court-180594/