`தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க ஆப்..!’ – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி – Vikatan

சென்னைச் செய்திகள்

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கு, அதன் பரவலைத் தடுப்பதில்தான் உள்ளது. நோய் பாதிப்பு உள்ளவர்களைக் கண்காணிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது என தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க, பெருநகர சென்னை மாநகராட்சி புதிய முறையைக் கையாளத் தொடங்கவிருக்கிறது.

Gcc corona quarantine app | கொரோனா

பெருநகர சென்னை மாநகராட்சி, கொரோனா பாதிக்கக்கூடும் எனத் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க, `Gcc corona quarantine’ புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த செயலியைக்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் லொகேஷனை டிராக் செய்ய முடியும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது கொரோனா அறிகுறி தங்களுக்கு இருப்பதாகத் தோன்றுபவர்களும் இந்தச் செயலியில் தங்கள் லொகேஷனையும் வீட்டின் புகைப்படத்தையும் அனுப்பலாம். இப்படி அனுப்பும்போது, குறுகிய ஒரே வட்டத்தை சுற்றி பலரும் அறிகுறிகளுடன் இருப்பதாக இருந்தால், அது உடனே மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தெரியவந்துவிடும்.

இது மட்டுமல்லாமல், ஓர் இடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடி சமூக இடைவெளியை (Social Distancing) கடைப்பிடிக்கத் தவறினால், அதையும் புகைப்படம் எடுத்து, அந்த செயலியில் பதிவிடலாம். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க ஆட்களை சென்னை மாநகராட்சி அனுப்பிவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.vikatan.com/health/news/chennai-city-corporation-builds-an-android-app-to-check-the-isolated-persons-location