90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் மாநகராட்சி சார்பாக இன்றில் இருந்து அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொரோனா சோதனை சோதனை செய்ய உள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 485 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 8 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் பலியாகி உள்ளனர். 474 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா காரணமாக சென்னைதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

imageகொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு!

சென்னை நிலை என்ன

சென்னையில் மட்டும் கொரோனா காரணமாக 91 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திண்டுக்கல்லில் 43 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 22 பகுதிகளில் மிக மோசமாக கொரோனா தாக்கியுள்ளது. வியாசர்பாடி, போரூர், ராயபுரம், மடிப்பாக்கம், பனையூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர், கோட்டூர்புரம், திருவான்மியூர், மாதவரம், ஆலந்தூர் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வேறு எங்கெல்லாம்

அதேபோல் புரசைவாக்கம்,பிராட்வே, அரும்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், அண்ணாநகர், சாந்தோம், அமைந்தகரை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகள் பாதித்துள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . இங்கு கட்டுப்பாடுகள் அதிகம் ஆகியுள்ளது. இதே நிலை சென்னையில் நீடித்தால் வரும் நாட்களில் சென்னை மோசமாக பாதிக்கும்.

நிலைமை எப்படி மோசமாகும்

முக்கியமாக சென்னையில் உள்ள தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கும். இதற்காக முக்கியமான ஆபரேஷன் ஒன்றை கையில் எடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் மாநகராட்சி சார்பாக இன்றில் இருந்து அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொரோனா சோதனை சோதனை செய்ய உள்ளனர்.

தீவிர சோதனை

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தினமும் 10 லட்சம் வீடுகளில் சென்னையில் சோதனை செய்ய இருக்கிறார்கள். மொத்தம் 90 நாட்கள் இப்படி வீடு வீடாக சோதனை செய்ய உள்ளனர். இதில் மாநகராட்சி ஊழியர்கள் எல்லோரும் பயன்படுத்தப்பட உள்ளனர். மொத்தம் இதில் 16 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் இதில் கலந்து கொண்டு பணிகளை செய்ய உள்ளனர்.

எத்தனை பேர்

இதற்காக மக்களிடமும் உதவியை கேட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம். மக்கள் எங்களுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும். ஆசிரியர்கள், மகளீர் சுயஉதவிக்குழுக்கள் இதில் ஈடுபடுத்தப்படும். இதில் சோதனை செய்ய வீடு வீடாக செல்ல வேண்டும். இதற்கு உரிய செலவுகள் மாநகராட்சி மூலம் செய்யப்படும். சோதனை செய்யும் நபர்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

என்ன சோதனையா

இந்த சோதனையில் கொரோனா பாதித்த உறவினர்கள் யாருடனாவது உங்களுக்கு தொடர்பு இருந்ததா என்ற அடிப்படை கேள்வி கேட்கப்படுகிறது. அதேபோல் வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வந்தது குறித்த டிராவல் ஹிஸ்டரி கேட்கப்படுகிறது. மேலும் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் இருக்கிறார்களா? என்று சோதனை செய்கிறார்கள். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த இதில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மக்கள் எல்லோருக்கும் தெர்மல் சோதனை செய்யப்பட உள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-chennai-takes-a-new-plan-to-tackle-the-pandemic-381761.html