இனி தினமும் வருவோம், ஒரு வீட்டையும் விடமாட்டோம்.. பதில் சொல்லனும்.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் வீடு வீடாக தினமும் மாநகராட்சி அதிகாரிகள் வருகை தந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என்று, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

image

How technology helps Tamilnadu in Contact tracing method so far?

தமிழகத்தில் சென்னையில்தான் அதிகப்படியான கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 110 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

எனவே சென்னையில், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில்தான், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பிரகாஷ்.

imageகேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது ‘INO-4800’ கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை!

வீடு வீடாக சோதனை

பேட்டியின்போது, பிரகாஷ் கூறியதாவது: வீடு வீடாக சென்று, மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யும் பணிகளை, மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க உள்ளனர். 100 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் சென்னையில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மொத்த மக்கள் அனைவரையுமே தினமும் ஒரு முறையாவது இந்த சோதனைக்கு உள்ளே கொண்டுவந்து விடுவோம் என்றார்.

அறிகுறி

அவர்களுக்கு, சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதுதான் இந்த ஆய்வின் நோக்கம். ஒருவேளை அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் தொடங்கப்படும். தற்போது சென்னையில் மூன்று வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழுவை நியமித்து உள்ளோம். சாதாரண இருமல், சாதாரண சளி, காய்ச்சல் இருந்தால் அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை செய்வார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, சந்தேகம் ஏற்பட்டால் அவர்களுக்கு வேறு மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்படும்.

சென்னையில் பாதுகாப்பு வளையம்

யாருக்காவது பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்படும். இதுவரை சென்னையில் 40 இடங்களில் இதுபோன்ற பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் மூலமாக, அங்கிருந்து வேறு பகுதிக்கு கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும். தொற்றுநோய் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில், இதுதான் உலகளாவிய தடுப்பு வழி முறை.

மாநகராட்சிக்கு உதவி

சென்னை மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தினமும் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். சாதாரண கேள்விகளைத்தான் உங்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு தக்க ஒத்துழைப்பு கொடுங்கள். நீங்கள் அளிக்க கூடிய இந்த ஒத்துழைப்பு மாநகராட்சியின் முயற்சிக்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-coronavirus-every-household-will-be-monitor-in-the-coming-days-381969.html