இந்த 6 பகுதி மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் : சென்னை மாநகராட்சி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கொரோனா கோப்புப் படம்

  • Share this:
சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 163 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேரும், திருவிக நகரில் 24 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், அண்ணாநகரில் 17 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 14 பேரும், தேனாம்பேட்டையில் 12 பேரும் உள்ளனர்.மேலும், பெருங்குடியில் 6 பேரும், வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூரில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் தலா 2 பேரும் உள்ளனர்.சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பட்டியல்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கின்றனர். எனவே, இப்பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வீடு வீடாக சோதனை செய்யப்படும் வருகின்றன என்றும், இப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. மண்டலம் வாரியாக உறுதி செய்யப்பட விபரங்கள்: திருவொற்றியூர் – 4, மணலி – 0, மாதவரம் – 3, தண்டையார்பேட்டை – 14, ராயபுரம் – 45, திருவிக நகர் – 24, அம்பத்தூர் – 0, அண்ணாநகர் – 17, தேனாம்பேட்டை – 12, கோடம்பாக்கம் – 19, வளசரவாக்கம் – 4, ஆலந்தூர் – 2, அடையார் – 4, பெருங்குடி – 6, சோழிங்கநல்லூர் – 2.


First published: April 10, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-coroporation-warns-these-area-people-in-chennai-to-be-more-isolated-and-careful-vet-mg-276523.html