நிவாரணப் பொருட்களை கொடுக்க 24 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும்: சென்னை மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற்று அலுவலர்கள் முன்னிலையில் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை அமலில் உள்ளதால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சென்னையில் உள்ள வீடற்றோர் ஆகியோரை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு வழங்கி, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வெளிமாநிலம் மற்றும் வெளியூரை சேர்ந்த சுமார் 6000 நபர்கள் மாநகராட்சியின் காப்பகங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிகள்,கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் என 96 மையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு போன்ற அடிப்படை ரேஷன் பொருட்கள் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று மாநகராட்சி அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்களை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கீழ்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ உள்விளையாட்டு அரங்கம், அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் பெசன்ட் நகரில் உள்ள சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் பெறப்பட்டு அங்கிருந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சியின் 407 அம்மா உணவகங்களில் வாயிலாக குறைந்த விலையில் தரமான உணவு மூன்று வேளையும் வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களில் இனிவரும் காலங்களிலும் உணவு வழங்க தேவையான அளவிற்கு சமையல் பொருட்கள் இருப்பில் உள்ளது..

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து உணவுகளை வழங்கி வருகின்றனர்.
அவ்வாறு உணவு வழங்கும் பொழுது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் முதல்வர் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

எனவே சமைத்த உணவு, மளிகை மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நாளை முதல் 24 மணிநேரத்திற்கு முன்னதாக இடம், உணவு வழங்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் வாகன எண் போன்ற விவரங்களுடன் கடிதம் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகவோ கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடம் அல்லது வட்டார துணை ஆணையாளர்கள் அல்லது மண்டல அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து முறையான அனுமதியைப் பெற்ற பின்பே உணவு பொருட்களை வழங்க வேண்டும்.

தலைமையிடம் :

செயற்பொறியாளர், கட்டடத்துறை, 5 ஆம் தளம், அம்மா மாளிகை, ரிப்பன் மாளிகை வளாகம்.
கைப்பேசி : 9445190057

வடக்கு வட்டாரம், மத்திய வட்டாரம், தெற்கு வட்டாரம்,

வடக்கு வட்டார துணை ஆணையர்,
எண்.62, பேசின் பாலம் சாலை,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை 600 021. கைப்பேசி : 9445025800.

மத்திய வட்டார துணை ஆணையர்,
எண்.36பி. 2வது குறுக்கு தெரு,புல்லா அவென்யூ,
ஷெனாய் நகர், சென்னை 600 030.
கைப்பேசி : 9445190150.

தெற்கு வட்டார துணை ஆணையர்,
எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை,
அடையாறு, சென்னை 600 020.
கைப்பேசி : 9445190100.

மண்டல அலுவலர், திருவொற்றியூர் மண்டலம், எண்.947, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை – 600 019 கைப்பேசி : 9445190001

மண்டல அலுவலர், திரு.வி.க. நகர் மண்டலம், எண்.5, ஆண்டர்சன் சாலை, அயனாவரம், சென்னை – 600 023. கைப்பேசி :9445190006

மண்டல அலுவலர், வளசரவாக்கம் மண்டலம், எண்.33, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை – 600 087 கைப்பேசி :9445190011

மண்டல அலுவலர், மணலி மண்டலம், எண்.1A, காமராஜர் சாலை, மணலி, சென்னை– 600 068 கைப்பேசி : 9445190002.

மண்டல அலுவலர், அம்பத்தூர் மண்டலம், திருவள்ளூர்நெடுஞ்சாலை, டன்லப்தொழிற்சாலை எதிரில்,சென்னை -600 053. கைப்பேசி :9445190007.

மண்டல அலுவலர், ஆலந்தூர் மண்டலம், எண்.1,புதுத் தெரு, ஜி.எஸ்.டி சாலை அருகில்,ஆலந்தூர், சென்னை – 600 016. கைப்பேசி :9445190012.

மண்டல அலுவலர், மாதவரம் மண்டலம், எண்.1,தட்டான்குளம்தெரு, பஜார் சாலை, மாதவரம்,
சென்னை – 600 060. கைப்பேசி :9445190003.

மண்டல அலுவலர், அண்ணாநகர் மண்டலம், புதியஎண்.36பி, புல்லா வென்யூ, செனாய் நகர், சென்னை – 600 030. கைப்பேசி :9445190008.

மண்டல அலுவலர், அடையாறு மண்டலம், எண்.115, டாக்டர்.முத்துலட்சுமி சாலை, சென்னை – 600 020. கைப்பேசி :9445190013.

மண்டல அலுவலர், தண்டையார்பேட்டை மண்டலம், எண்.266, திருவொற்றியூர்,நெடுஞ்சாலை,
சென்னை – 600 021. கைப்பேசி :9445190004.

மண்டல அலுவலர், தேனாம்பேட்டை மண்டலம், எண்.4, 4வது குறுக்கு தெரு, ஏரிக்கரை சாலை, சென்னை – 600 034. கைப்பேசி :9445190009.

மண்டல அலுவலர், பெருங்குடி மண்டலம், எண்.6/64, புழுதிவாக்கம் பிரதான சாலை, சென்னை – 600 091. கைப்பேசி :9445190014

மண்டல அலுவலர், ராயபுரம் மண்டலம், எண்.62, பேசின் பிரிட்ஜ் சாலை, சென்னை – 600 079. கைப்பேசி :9445190005.

மண்டல அலுவலர், கோடம்பாக்கம் மண்டலம், எண்.64, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600 024. கைப்பேசி :9445190010.

மண்டல அலுவலர், சோழிங்கநல்லூர் மண்டலம், எண்.120, இராஜீவ் காந்தி சாலை, சோழிங்கநல்லூர், சென்னை – 600 119. கைப்பேசி :9445190015.

உணவுகளை போருட்களை வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் அல்லது தன்னார்வலர்களின் ஒரு வாகன ஓட்டுனர், விநியோகம் செய்வதற்கு ஒரு நபர் மற்றும் ஒரு உதவியாளர் என மூன்று நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மேலும் அவ்வாறு உணவு வழங்கும் பொழுது எந்த ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சிகளின் கொடி,சின்னம் அல்லது எந்தவித விளம்பரங்களையும் பயன்படுத்தக்கூடாது. பின்னர் மாநகராட்சி மண்டல அலுவலரால் அனுமதிக்கப்பட்ட அலுவலரின் முன்னிலையில் மட்டுமே இந்த உணவுகள் வினியோகம் செய்யப்பட வேண்டும்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடித்து வரும் இந்நேரத்தில் ஒரு சிறிய இடத்தில் கூட மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலேயே இது போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழ ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/549402-permits-must-be-received-24-hours-prior-to-delivery-chennai-corporation.html