கொரோனா: தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் சென்னை- 303 பேருக்கு பாதிப்பு- மாவட்ட வாரியாக விவரம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் சென்னைதான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையில் மொத்தம் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்களாக புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி இருந்து வந்தன. இதில் இன்று புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

டாப் 5 மாவட்டங்களில் சென்னை , கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

  • சென்னை- 303; கோயம்புத்தூர்-133; திருப்பூர் 108; திண்டுக்கல் 76; ஈரோடு 70
  • திருநெல்வேலி 62; செங்கல்பட்டு 53; நாமக்கல் 50; திருச்சி 50
  • திருவள்ளூர் 48; மதுரை 46 ; தஞ்சாவூர் 46; நாகப்பட்டினம் 43; தேனி 43; கரூர் 42
  • ராணிப்பேட்டை 39; விழுப்புரம் 36; திருவாரூர் 27 தூத்துக்குடி 27; கடலூர் 26; தென்காசி 26; சேலம் 24; வேலூர் 22 ;
  • விருதுநகர் 19 ; திருப்பத்தூர் 17 கன்னியாகுமரி 16; சிவகங்கை 12; திருவண்ணாமலை 12; ராமநாதபுரம் 11;
  • காஞ்சிபுரம் 9; நீலகிரி 9; பெரம்பலூர் 5; அரியலூர் 4; கள்ளக்குறிச்சி 3; புதுக்கோட்டை 1

Source: https://tamil.oneindia.com/news/chennai/in-tn-highest-number-of-positive-cases-reported-from-chennai-303-383185.html