கொரோனா: சென்னை மாநகராட்சியின் அடுத்தகட்ட திட்டம் என்ன…? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
தொற்று

  • Share this:
சென்னையில் இதுவரை மொத்தம் 358 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 86 பேர் குணமடைந்து உள்ளனர்.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 46 பேரும், திருவிக நகரில் 42 பேரும், தேனாம்பேட்டையில் 42 பேரும்,  கோடம்பாக்கத்தில் 35 பேரும்,  அண்ணாநகரில் 27 பேரும் உள்ளனர்.மேலும், திருவொற்றியூரில் 12 பேரும், வளசரவாக்கத்தில் 11 பேரும், பெருங்குடியில் 8 பேரும், ஆலந்தூர் மற்றும் அடையாறில் தலா 7 பேரும்,   மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் முதல் தொற்று ஏற்பட்டு அங்கு 1 நபரும் உள்ளனர்.
சென்னையில் மணலி மண்டலத்தில் மட்டும் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.மண்டலம் – மொத்தம் – உயிரிழந்தவர்கள் – குணமடைந்தவர்கள்___திருவொற்றியூர் – 12 – 0 – 2மணலி – 0 – 0 – 0மாதவரம் – 3 – 0 – 3தண்டையார்பேட்டை – 45 – 1 – 4ராயபுரம் – 116 – 5 – 18திருவிக நகர் – 42 – 1 – 13அம்பத்தூர் – 1 – 0 – 0அண்ணாநகர் – 27 – 1 – 10தேனாம்பேட்டை – 42 – 0 – 6கோடம்பாக்கம் – 35 – 0 – 16வளசரவாக்கம் – 9 – 0 – 4ஆலந்தூர் – 7 – 0 – 2அடையார் – 7 – 0 – 4பெருங்குடி – 8 – 0 – 3சோழிங்கநல்லூர் – 2 – 0 – 1
சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.83% பேரும், பெண்கள் 34.17% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 77 பேருக்ககும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் நேற்று மட்டும் 22 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்தம் 71 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 4 நபரும், 80 வயதுக்கு மேல் 7 நபரும் பாதித்து உள்ளனர்.10 முதல் 19 வயதுள்ளோர் 24 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 61 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 63 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 33 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 17 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

வயது = பாதித்தோர் எண்ணிக்கை____0-9 = 410-19 = 2420-29 = 71 30-39 = 7740-49 = 6150-59 = 6360-69 = 3370-79 = 1780 = 7ராயபுரத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 22 பேர் 20 முதல் 29 வயதுக்குள் உள்ளவர்கள்.இந்த நபர்கள் அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ராயபுரத்தில் நாளுக்கு நாள் உயரும் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த மூன்றடுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மேலும்,ராயபுரத்தில் தொற்றுள்ள பகுதிகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் யாரும் வெளியே வராதவாறு, அவர்களுக்கு தேவையான அனைத்தும் வீடுகளுக்கே கொண்டு செல்ல உள்ளதாகவும், இப்பகுதிகளில் வீடு வீடாக சோதனையை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: April 22, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/what-can-be-the-chennai-corporations-next-action-on-diagnosing-and-screening-vet-mg-281137.html