சென்னை அண்ணாசாலையில் வாகனங்கள் செல்லத் தடை – போலீசார் அதிரடி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
அண்ணா சாலை

  • Share this:
சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் முதல் வாலாஜா சாலை சிக்னல் வரையான பகுதியில் பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். நிலைமை இப்படி இருக்க ஊரடங்கை மீறி வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக அண்ணா சாலையில் வழக்கமான நாளில் வாகனங்கள் செல்வதுபோல் சென்று வந்தன. இதனால் போலீசார் கெடுபிடிகளை அதிகரித்தனர். எனினும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதனால், அண்ணா சாலையில் பிற்பகலுக்குப்பின் போக்குவரத்துக்கு தடை விதித்து அதிரடியாக சென்னை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி ஜெமினி மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் வரை சாலை முழுவதும் மூடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அத்தியாவசிய பணிகளில் உள்ள வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.ஒரு மணிக்கு பின்னர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வாகனங்கள், அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: April 23, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-chennai-anna-salail-blocked-says-police-msb-281727.html