சென்னை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் 32 வயதுள்ள வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

போரூர்:

சென்னையில் கொரோனாவால் இதுவரை 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நரசுகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் 32 வயதுள்ள வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்து வந்த வளசரவாக்கத்தில் உள்ள தெருக்கள் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு தினமும் பணிக்கு மாநகர சிறப்பு பஸ்சில் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளார். அவருடன் பயணம் செய்த ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நர்சுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பஸ்சில் அவருடன் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகிறார்கள். அவர்களுக்கும் பரிசோதனை நடத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Source: https://www.maalaimalar.com/news/district/2020/04/23162942/1447168/Nurse-impact-coronavirus-at-Chennai-Govt-Hospital.vpf