சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு ஏன்? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

கொரோனா தொற்று பரவுவதற்கான காரணங்கள் எதுவும் தெரியாததால் தான், சென்னை, கோவை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதுமான ஊரடங்கு ஒரு மாதத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, சேலம் ஆகிய மாநகராட்சிகளில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது அண்மையில் உயர்ந்துள்ளது.  வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ பயணம் மேற்கொள்ளாத இவர்களுக்கு எப்படி வைரஸ் பரவியது என்ற தெளிவான காரணங்களும் தெரியவில்லை.கடந்த 22-ம் தேதி, மதுரையில் இரண்டு பேருக்கு முதல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.  23-ம் தேதி, சென்னையில் ஆறு பேர், சேலத்தில் 4 பேர், மதுரையில் இருவர், திருப்பூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.  அதேபோல், நேற்றும், சென்னையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 9 பேருக்கு எவ்வாறு தொற்று பரவியது என்பது தெரியவில்லை. இதன் காரணமாக, ஐந்து மாநகராட்சிகளும் சமூகத் தொற்றின் விளிம்பில் இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

குறிப்பாக மதுரை, சேலம் மாவட்டத்தைவிட, அதிகம் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் கூட முழு ஊரடங்கு அறிவிக்கப்படாத சூழலில் இந்த ஐந்து மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சேலத்தில் 30 பேர் மற்றும் மதுரையில் 56 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதைவிட திருச்சியில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நெல்லையில் 63 பேரும், தஞ்சையில் 55 பேரும் பாதிக்கப்பட்டனர். நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பாதிப்புகள் இருந்தபோதிலும் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை.

[embedded content]


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Source: https://tamil.news18.com/news/tamil-nadu/why-5-cities-lockdown-yuv-282303.html