சென்னை ஏன் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக தொடர்கிறது? – Vikatan

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் காணப்படுவது இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்று புகழப்படும் சென்னையில்தான். எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சென்னையில் மட்டும் 570 நோயாளிகள் காணப்படுகின்றனர்.

இதற்கான காரணம் என்னவென்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்:

மும்பை, டெல்லி, அகமதாபாத், சென்னை போன்ற பெருநகரங்களில் இந்தப் பிரச்னை நீடிக்கிறது. சென்னையில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தர்மபுரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் வீடுகளின் அமைப்பு என்பது புவியியல் ரீதியாக இடைவெளிகளுடன் அமைந்துள்ளது. இதனால் மக்களும் தள்ளித்தள்ளி வசிக்கின்றனர். இது நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் அமைகிறது. சென்னையில் குறுகிய இடத்தில் பலர் வசிக்கின்றனர்.

Source: https://www.vikatan.com/news/healthy/why-chennai-remains-a-hotspot-for-covid-19