கடந்த 3 நாட்கள்தான் மோசம்.. உயரும் கொரோனா கிராப்.. சென்னை மட்டுமல்ல.. மற்ற மாவட்டங்களிலும் தீவிரம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தீவிரமாக பரவி வந்தது. முக்கியமாக சென்னையில் இருக்கும் 6 மண்டலங்களில்தான் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து இருந்தது. சென்னையில் மட்டும் தினமும் தமிழகத்தில் 90% கேஸ்கள் தீவிரமாக பரவி வந்தது. ஆனால் தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது.

image2 வார பிளான்.. 42 பேரையும் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்த கரூர்.. எல்லோரும் குணம்.. எப்படி சாதித்தது?

மீண்டும் வருகிறது

  • தமிழகத்தில் தற்போது சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னை தவிர இன்று 10 மாவட்டங்களில் தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டது.
  • அரியலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது. மொத்தமாக ஏழு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • மதுரை மற்றும் செங்கல்பட்டில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • செங்கல்பட்டில் மொத்தம் 78 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் மொத்தம் 84 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • காஞ்சிபுரத்தில் மொத்தம் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • ராமநாதபுரத்தில் மொத்தம் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • ராணிப்பேட்டை, சேலம் , திருவள்ளூர், கடலூரில் தலா ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • கடலூரில் மொத்தம் 27 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.ராணிப்பேட்டையில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • சேலத்தில் மொத்தம் 32 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
  • பெரம்பலூரில் மொத்தம் 2 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

அதிகம் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் பின் வருமாறு

  • சென்னை – 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கோவை – 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • திருப்பூர் – 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மதுரை – 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • திண்டுக்கல் – 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • செங்கல்பட்டு – 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணம் அடைந்தவர்கள்

தமிழகத்தில் இன்று மொத்தம் 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 1258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

  • சென்னை – 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • கோவை – 125 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • திருப்பூர் – 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
  • மதுரை – 40 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • திண்டுக்கல் – 71 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • செங்கல்பட்டு – 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் மோசம்

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்கள்தான் மிக மோசமாகும். கடந்த மூன்று நாட்களாக தினமும் 100+ நோயாளிகள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முதல் நாள் 121 பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டது. அதன்பின் நேற்று 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் இன்று 161 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இப்படி வரிசையாக தினமும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது.

சென்னையில் மூன்று நாட்கள்

அதேபோல் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக வரிசையாக கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று முதல் நாள் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று 94 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று மிக அதிகமாக 138 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா கிராப் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-not-only-chennai-but-other-districts-in-tn-also-started-seeing-a-surge-in-cases-384144.html