ATMஐ பயன்படுத்திய பின்னர் சுத்தம் செய்க – சென்னை மாநகராட்சி – News18 தமிழ்

மாதிரிப் படம் Share this: ஏடிஎம்-ஐ ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியமாக இயக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 1. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய […]

Continue Reading

தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி – மாலை மலர்

சென்னை மாநகராட்சி பகுதியில் அரசு, தனியார் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி பகுதியில் அரசு, தனியார் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் […]

Continue Reading

சென்னையில் மே 13 வரை இவைகளுக்கு தடை!! – நக்கீரன்

    தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 121 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 2058 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் 4 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ள நிலையில், தற்போது கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளி ஒருவருக்கு கரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா பாதித்திருக்கும் நிலையில் கோயம்பேடு சந்தையை  மூடும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் மே 13ஆம் தேதி […]

Continue Reading

கட்டுப்பட மறுக்கும் சென்னை மாநகரம்! தடுப்பு நடவடிக்கைகளை மாற்றியமைக்க அரசு திட்டம் – தினமணி

கரோனா பரவல் சற்று குறைந்திருப்பதாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆறுதல் அடைந்து வரும் நிலையில், தலைநகா் சென்னை மட்டும் கவலையளிக்கத் தொடங்கி இருக்கிறது. தேசிய அளவில் கரோனா பாதித்த பெருநகரங்களின் பட்டியலில் சென்னை முக்கிய இடத்தில் இருப்பதும், கடந்த சில நாள்களாக நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதும் மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், நிா்வாகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இத்தனைக்கும், ஏனைய மாவட்டங்களைவிட சென்னையில்தான் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும் கண்காணிப்பும் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை […]

Continue Reading

ரம்ஜான் – பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் அரசின் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி – Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்து முன்னணி அமைப்பின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு 5,440 மெட்ரிக்டன் பச்சரிசி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். […]

Continue Reading