சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்துக்கு அனுமதி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
அண்ணா சாலை

  • Share this:
சென்னை அண்ணா சாலையில் இன்று முதல் போக்குவரத்து சேவைக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது. இதில் அதிகம் தொற்று பாதிக்கப்படாத இடங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னையில் தொற்று அதிகரித்ததன் காரணமாக சென்னையின் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் வரை சாலை முழுவதுமாக கடந்த மாதம் 23-ம் தேதி மூடப்பட்டது. இதன்காரணமாக அண்ணா சாலையில் பல்வேறு பகுதிகளில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், அண்ணாசாலையில் இன்று முதல் போக்குவரத்து சேவைக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: May 3, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-chennai-anna-salai-openred-msb-286243.html