அடுத்தடுத்த தெருக்கள்.. ஒரே குடும்பங்கள்.. சென்னையில் அதிகரிக்கும் கிளஸ்டர் பரவல்.. தொடரும் சிக்கல்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் சமீப நாட்களில் அதிகமாக ஒரே தெருக்களிலும், ஒரே குடும்பத்திற்கு உள்ளும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரே நாளில் சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்தமாக 3550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

imageவெறும் 8 நாட்கள்.. கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியது எப்படி.. சறுக்கியது எங்கே.. முழு பின்னணி!

மண்டல வாரியான விவரம்

சென்னையின் மண்டல வாரியான விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் ராயபுரத்தில் 299 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று அங்கு 78 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் 29 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று மட்டும் 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. வளசரவாக்கம் பகுதியில் 77 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மணலியில் 10 பேருக்கு கொரோனா உள்ளது. இந்த பகுதிகளில் நேற்று கொரோனா தீவிரம் எடுத்தது.

மிக மோசமாகும் நிலை

அடையாறு 44 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அங்கு 7 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் 206 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அங்கு 24 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டையில் 155 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அங்கு 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவிக நகரில் 357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அங்கு 40 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

வேறு இடங்கள் என்ன

பெருங்குடியில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 257 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நேற்று 24 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அண்ணாநகரில் 144 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 22 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மாதவரத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அங்கு 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் 5 பேர், ஆலந்தூரில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூரில் 67 பேருக்கு மொத்தமாக கொரோனா உள்ளது.

அதிகம் கேஸ்கள் இருக்கும் இடங்கள்

சென்னையில் அதிகம் கேஸ்கள் இருக்கும் இடங்கள் என்று பார்த்தால் ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் ஆகிய மண்டலங்கள்தான். இதில் பெரும்பாலான இடங்கள் வடசென்னை பகுதியில் வருகிறது. சென்னையில் வடசென்னைதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் பகுதி புதிய கிளஸ்டர் கேஸ்களை சந்திக்க தொடங்கி உள்ளது.

தெருக்களில்

ஒரே தெருக்களில் அல்லது அடுத்தடுத்த வீடுகளில் கொரோனா கேஸ்கள் வந்தால் அதை கிளஸ்டர் கேஸ்கள் என்று கூறுவார்கள். சென்னையில் இப்போது அப்படித்தான் எந்தெந்த தெருக்களில் எல்லாம் ஏற்கனவே கொரோனா வந்ததோ, அங்குதான் கொரோனா தீவிரம் அடைகிறது. அதாவது ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா இப்படி வருகிறது. கொத்து கொத்தாக இப்படி அருகருகே கேஸ்கள் அதிகரிக்கிறது.

கொஞ்சம் எளிமையானது

பெரும்பாலும் நேற்று ஏற்பட்ட கேஸ்கள் கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் நேற்று ஏற்பட்ட கேஸ்களில் பலர் உறவினர்கள், நெருக்கமானவர்கள். அதாவது தொடர்பே இல்லாத வேறு ஒருவருக்கு கொரோனா பரவுவதற்கு பதில் ஒரே குடும்பத்திற்கு உள்ளேயே கொரோனா பரவி உள்ளது. இதனால் காண்டாக்ட் டிரேசிங் செய்வதும், மக்களை தனிமைப்படுத்துவதும் கொஞ்சம் எளிதாகி உள்ளது .

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-chennai-cluster-cases-are-increasing-day-by-day-in-the-city-384536.html