சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெறுபவர்கள், குணம் அடைந்தவர்கள் விவரம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 408 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று (மே6ம் தேதி) ஒரு நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . சென்னையில் மட்டும் நேற்று ஒரு நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதான் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஒரு நாளில் ஏற்பட்ட உச்சபட்ச பாதிப்பு ஆகும். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4829 ஆக உயர்நதுள்ளது.

imageகொரோனா அச்சுறுத்தல்.. எல்லைப் பகுதிகளில் இருமாநில போலீஸாருக்குள் மோதல்

திருவிக நகர் மண்டலம்

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மண்டல வாரியான விவரத்தை வியாழக்கிழமை காலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. . திருவிக நகர் மண்டலத்தில் 357 பேர் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 51 பேர் அங்கு குணம் அடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோடம்பாக்கம் மண்டலம்

இராயபுரம் மண்டலத்தில் 269 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 98 பேர் குணம் அடைந்துள்ளனர். 8 பேர் கொரோனாவுக்கு ராயபுரம் மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 352 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். 33 பேர் குணம் அடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

வளசரவாக்கம் பாதிப்பு

தேனாம்பேட்டை மண்டலத்தில் 243 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். 42 பேர் குணம் அடைந்துள்ளனர். யாரும் இந்த மண்டலத்தில் உயிரிழக்கவில்லை. அண்ணா நகர் மண்டலத்தில் 154 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். 32 பேர் குணம் அடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 166 பேர் சிகிச்சை பெறகிறாக்ரள். 9 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவொற்றியூர்

தண்டையார் பேட்டை மண்டலத்தில் 126 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுகிறார்கள். 41 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பத்தூர் மண்டலத்தில் 104 சிகிச்சை பெறுகிறார்கள். ஒருவர் குணம் அடைந்துள்ளார். அடையாறு மண்டலத்தில் 10 பேர் குணம் அடைந்த நிலயில் 80 பேர் தொற்றுடன் சிகிச்சை பெறுகிறார்கள். திருவொற்றியூர் மண்டலத்தில் 9 பேர் குணமடைந்த நிலையில், 31 பேர் தொற்றுடன் சிகிச்சை பெறுகிறார்கள்.

மாதவரம் நிலவரம்

ஆலந்தூரில் 8 பேர் குணம் அடைந்த நிலையயில் 6 பேர் பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். பெருங்குடி மண்டலத்தில் 7 பேர் குணம் அடைந்த நிலையில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாதவரத்தில் 3 பேர் குணம் அடைந்துள்ளனர். 27 பேர் தொற்றுடன் சிகிச்சை பெறுகிறார்கள். மணிலி மண்டலத்தில் ஒருவர் குணம் அடைந்துள்ளார். 12 பேர் தொற்றுடன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். சோழிங்க நல்லூரில் 3 பேர் குணம் ஆகியுள்ள நிலையில் 12 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்..

எவ்வளவு பாதிப்பு

சென்னையில் மே 6 ம்தேதி மாலை நிலவரப்படி 2322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 348 பேர் குணம் அடைந்துள்ளனர். 1952 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் ஐஸ் அவுஸ் தன்னார்வலர், திருவான்மியூர் காய்கறி வியாபரி, அசோக் நகர் திடீர் காய்கறி வியாபாரிகள் ஆகியவை சென்னையில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க காரணமாக உள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-covid-19-details-of-zonal-wise-covid-19-affected-persons-in-chennai-384773.html