ஐஐடியின் ஆராய்ச்சி ரிப்போர்ட்.. சென்னையில் மட்டும் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன? முக்கிய பின்னணி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்க காரணம் என்ன என்று சென்னை ஐஐடி வெளியிட்ட ஆராய்ச்சி ரிப்போர்ட் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக சென்னைதான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தமிழகத்தில் ஏற்படும் கேஸ்களில் தினமும் 80% கேஸ்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதிதாக 580 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதில் சென்னையில் இதுவரை 2,644 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 316 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

imageகொரோனா மரணங்கள்.. மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் 10% ஆக அதிகரிப்பு; ம.பி, குஜராத்தில் 6% ஆக குறைவு

கோயம்பேடு காரணம்

சென்னையில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்க கோயம்பேடு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேட்டில் சிலருக்கு கொரோனா ஏற்பட அங்கிருந்து ஊழியர்கள், மக்களுக்கு கொரோனா பரவியது. இதனால் தமிழகம் முழுக்க தற்போது கொரோனா பரவ தொடங்கி உள்ளது. ஆனால் சென்னையில் இப்படி கொரோனா பரவ கோயம்பேடு மட்டும் காரணம் இல்லை.

ஐஐடி ரிப்போர்ட்

சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்க காரணம் என்ன என்று சென்னை ஐஐடி வெளியிட்ட ஆராய்ச்சி முடிவு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி சென்னையில் கோயம்பேடு காரணமாக அதிகமாக கேஸ்கள் வரும் முன்பே இந்த ஐஐடி ஆராய்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. தமிழக அரசிடம் இந்த ஐஐடி ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த பகுதிகளில் எல்லாம் வெளியே போகிறார்கள், அதிகமாக சுற்றுகிறார்கள் இந்த ரிப்போர்ட்டில் ஐஐடி சுட்டிக்காட்டியுள்ளது.

பேஸ்புக் மூலம்

மக்களின் நடமாட்டத்தை ஜிபிஎஸ் மூலம் இவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பேஸ்புக்கில் இருக்கும் ஜிபிஎஸ் லொகேஷன் தொழில்நுட்பம் மூலம் (location feature) மக்கள் எங்கே எல்லாம் சென்றார்கள். ஊரடங்கின் போது எந்த இடத்தில் கூட்டமாக இருந்தனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதேபோல் ஜிபிஎஸ் நுட்பத்தை பயன்படுத்தும் மற்ற சில ஆப்களையும் இவர்கள் பயன்படுத்தி உள்ளனர். மத்திய அரசு மற்றும் covid19india.org வின் டேட்டாக்களை இந்த ரிப்போர்ட்டில்இணைத்துள்ளனர்.

எங்கெல்லாம் வந்தனர்

இதன் மூலம் ஊரடங்கிற்கு இடையில் எங்கெல்லாம் மக்கள் வெளியே வந்துள்ளனர் என்று ஐஐடி கண்டுபிடித்து ரிப்போர்ட் மூலம் கூறியுள்ளது. முக்கியமாக சென்னை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில்தான் அதிகமாக மக்கள் வெளியே வந்துள்ளனர். அதிலும் வார இறுதி நாட்களில் அதிகமாக சென்னையில் வெளியே வந்துள்ளனர். தமிழகம் முழுக்க மக்களின் நடமாட்டம் பேஸ்புக் மூலம் இப்படி டிராக் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அதிகம்

ஆனால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் அதிகமாக மக்கள் வெளியே சென்று இருக்கிறார்கள். முக்கியமாக வடசென்னை பகுதியில் அதிகமான மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட், சில மீன் மார்க்கெட்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதிகளில் மக்கள் அதிகமாக நடமாடி இருக்கிறார்கள். தற்போது இங்கெல்லாம் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

மொத்த டேட்டா வந்தது

முக்கியமாக சென்னை,கடலூர், அரியலூர் , சிவகங்கை, பெரம்பலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கியமான மாவட்டங்களில் அதிக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அதிக நடமாட்டம் இருந்துள்ளது. இங்குதான் கேஸ்களும் அதிகமாகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த திங்கள் கிழமை, அதாவது மூன்றாவது லாக்டவுன் அமலுக்கு வந்த போது மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மக்கள் கூட்டம்

தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்து வந்துள்ளது. ஏப்ரல் 26-29ம் தேதியை விட கடந்த 4ம் தேதி 17% மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது. ஏப்ரல் 14-25 நாட்களை விட மே 4ம் தேதி 7% மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது. அதேபோல் ஏப்ரல் 26-29நாட்களை விட மே 4ம் தேதி 7% மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது. இதுதான் திடீர் கொரோனா உயர்வுக்கு காரணம் ஆகும்.

விளக்கம்

இந்த டேட்டா மூலம் மக்கள் எவ்வளவு அருகில் இருந்தனர் என்பதும் தெரியும். இதன் மூலம், சென்னையில்தான் மற்ற பகுதிகளை விட மக்கள் அதிக நெருக்கமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன், இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். இவர் இந்த டேட்டா ரிப்போர்டை உருவாக்கும் குழுவில் முக்கிய பங்காற்றினார்.

முக்கிய தொடர்பு

அவர் அளித்துள்ள விளக்கத்தில், சென்னையில் எங்கெல்லாம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது, எங்கெல்லாம் கொரோனா கேஸ்கள் அதிகமாக இருந்தது. அதற்கு இடையிலான தொடர்பு என்ன என்பது இந்த டேட்டா மூலம் தெரிய வரும்கிறது. இதன் மூலம் கொரோனா பரவல் குறித்த தெளிவை நாம் பெற முடியும் என்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கேஸ்கள் அதிகரிக்க மக்கள் கூட்டமாக வெளியே வந்ததும், நெருக்கமாக இருந்ததும் முக்கிய காரணம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,இன்றே பதிவு செய்யுங்கள் – பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-chennai-has-the-highest-number-of-mobility-during-lockdown-says-madras-iit-report-384875.html