கொரோனா: சென்னை – ராயபுரத்தில் 971 பேர் பாதிப்பு! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழ்நாட்டில் பாதிப்பு சமீப நாள்களில் 500க்கு மேல்தான் பதிவாகி வந்தது. இதில் நேற்று சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் பாதிக்கும் மேல் சென்னையில்தான் பாதிப்பு உருவாகிறது. கொரோனாவால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள், அரசு எடுக்கும் நடவடிக்கைகள், நான்காவது ஊரடங்கு ஆகியவை குறித்து உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.

LIVE UPDATE

* உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது – கமல் ஹாசன்

* தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை -உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

*சென்னைக்கான கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

* “சென்னையில் 70 ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 65 வார்டுகளில் 10க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.”

*“சென்னையில் ராயபுரம் மண்டலத்துக்கு தனி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.”

*“பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை சமுதாய நல கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.”

*“தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணிய வேண்டும். மக்களிடம் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.” என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

*கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

*தமிழ்நாட்டில் ஊரடங்கை மீறியதாக 4 லட்சத்து 73 ஆயிரத்து 606 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 3 லட்சத்து 90 ஆயிரத்து 562 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 கோடியே 59 லட்சத்து 89 ஆயிரத்து 779 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

*ராணிபேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஏஓ ரகுராம் அளித்த புகாரில் 50 பெண்கள் உட்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

*சிகையலங்காரம், அழகுநிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்க முதலவரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

*சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*திருச்சி அருகே கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 50 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*ஸ்ரீபெரும்புதூர் மலையம்பாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டில் முன்னாள் திமுக அமைச்சர் மொய்தீன் கானின் மகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

*தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

*தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

*சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் மூலம் 781 பேர் வந்துள்ளனர். அவர்கள் தனியார் விடுதி, அரசு முகாம் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்யப்படவுள்ளது.

*தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையில் மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

*2,240 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 58 ஆய்வகங்கள் உள்ளன. நேற்று மட்டும் 11 ஆயிரத்து 965 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை தமிழ்நாட்டில் 2 லட்சத்து 91 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

*கொரோனால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சதவீதம் தமிழ்நாட்டில் 0.67 சதவீதமாக உள்ளது.

*சென்னையில் நேற்று இருவர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/no-of-coronavirus-case-updates-in-tirunelveli-chennai-cuddalore-live-updates/articleshow/75748932.cms