சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1,272 ஆக உயர்வு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  தமிழகத்தில் 7,270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  4,406 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224ல் இருந்து 11,760 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் 364 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு 7 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.  தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில், பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வடைந்து உள்ளது.

சென்னையில் ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மற்ற மண்டலங்களை பின்னுக்கு தள்ளி விட்டு தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.  ராயபுரத்தில் இந்த எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம் 1,077 பேருடன் 2வது இடத்தில் உள்ளது.  திரு.வி.க.நகர் 835 பேருடன் 3வது இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து, தேனாம்பேட்டை 786, தண்டையார்பேட்டை 610, அண்ணாநகர் 586, வளசரவாக்கம் 532, அடையாறு 391, அம்பத்தூர் 321, திருவெற்றியூர் 161 ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.

இதேபோன்று மாதவரம் 133, சோழிங்கநல்லூர் 101, மணலி 93, பெருங்குடி 92, ஆலந்தூர் 84 ஆகியவை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டலங்களாக அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/05/19162545/Corona-infection-in-Chennais-Royapuram-region-rises.vpf