சென்னையில் கொரோனாவை ஒழித்துக்கட்ட அதிரடி திட்டம்… இன்று முதல் அமல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் வீடு தவறாமல் கொரோனா சோதனை நடத்தும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது கொரோனாவை ஒழித்துக் கட்டுவதற்கான சூப்பர் திட்டமாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் சுகாதாரத்துறை தவித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா இல்லாத சென்னை என்ற முழக்கத்தை முன்வைத்து இன்று தொடங்கப்படும் கொரோனா சோதனை திட்டம் வீடு தவறாமல் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகரம் என்பதால் இது மற்ற மாவட்டங்களை விட சற்று வித்தியாசமானது. அதேபோல் மக்கள் குடியிருப்புகளும் நெருக்கடியாக தான் இருக்கும்.

முதற்கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு விக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் டோர் டூ டோர் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. மைக்ரோ பிளான் மூலம் சோதனையை நடத்த இருக்கும் சுகாதாரத்துறை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுரக் குடிநீர் பொட்டலங்களையும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

imageகொரோனா டிஸ்சார்ஜ் விதிகளை திடீரென மாற்றிய தமிழக அரசு.. இனிமேல் இதுதான் வழி.. சுகாதாரத்துறை அதிரடி!

மேலும், சென்னை மாநகரம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்கள் மூலம் கபசுர குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் 10 நாட்களில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது. கொரோனா இல்லாத சென்னை என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தலைமையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/action-plan-to-eradicate-corona-in-chennai-386041.html