ஒருவழியாக.. சென்னையில் மீண்டும் ஓடும் ஆட்டோ, டாக்சி.. விமான, ரயில் நிலையங்களுக்கு இயக்க அரசு அனுமதி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

சென்னை மாநகர போலீஸ் எல்லை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள் 23ம் தேதி முதல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், ஓட்டுநரை தவிர்த்து, ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அதற்கு விதிக்கப்பட்டுள்ளன.

imageசென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று.. 11.30 முதல் 3.30 மணிவரை மக்கள் வெளியே வர வேண்டாம்

ரயில் நிலையம்

இந்த நிலையில், நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. ஆனால் விமான நிலையங்களுக்கு செல்வோர், பொதுப் போக்குவரத்து மற்றும், ஆட்டோ, டாக்சி இயக்கப்படாததால் சிரமத்திற்கு உள்ளாகினர். சொந்த கார் வைத்துள்ளோர்தான், விமான நிலையம் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

சென்னை நிலவரம்

சென்னையில் மே 19ம் தேதிக்கு பிறகு நாள்தோறும், 500க்கும் மேற்பட்டோருக்கு தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி வருகிறது. சென்னையில், 11,125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நிலவர புள்ளி விவரம் தெரிவித்தது. எனவேதான், இங்கு, ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

அரசாணை

இந்த நிலையில்தான், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோக்கள், டாக்சிகள், சைக்கிள் ரிக்ஷாக்களுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல் முறை

சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகு இதுவரை ஆட்டோ, டாக்சி இயங்காமல் இருந்த நிலையில் முதல் முறையாக, இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு, ஆட்டோ, டாக்சி இயக்கத்தை பார்க்க உள்ளனர்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/auto-and-taxis-are-allowed-to-transport-passengers-to-the-train-station-and-airports-in-chennai-386560.html