சென்னை: கொரோனாவுக்கு இன்று 8 பேர் உயிரிழப்பு | Chennai: today 8 dead for corona – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர்

Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த நான்கு நாட்களாக, நாள்தோறும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 25,872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14,316 பேர் குணமடைந்துள்ளனர். 208 பேர் உயிரிழந்துள்ளனர்.image

வரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது 

Advertisement

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர், ராஜூவ் காந்தி மருத்துவமனையில் 5 பேர், சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் என 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/71370/Chennai–today-8-dead-for-corona