டேட்டா சயின்ஸில் இலவசப் பயிற்சி! – தினமணி

சென்னைச் செய்திகள்

கரோனா நோய் தொற்றால் உலகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் வீட்டில் முடங்கி தவித்து வருகின்றனர்.   அவர்கள் ஆன்லைன் மூலம் இலவசமாகக் கற்று தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் மூலம் SWAYAM  தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறுவகையான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. 9 -ஆம் வகுப்பு முதல் முதுகலை படிப்பவர்கள் வரை யார் வேண்டுமென்றாலும், எங்கு இருந்தாலும், எந்த நேரம் எனறாலும் பயிற்சி பெற முடியும். அதுவும் இலவசமாக. இதற்காக இந்தியா முழுமையிலிருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறை வல்லுநர்கள் ஆசிரியர்கள் உங்களுடன் உரையாடி, விளக்க
மளிக்க இதற்காக காத்திருக்கிறார்கள். 

வீடியோ லெக்சர்ஸ், ரீடிங் மெட்டீரியல் (டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்), சுய பரிசோதனை தேர்வுகள் (தேர்வு மற்றும் விநாடி, வினா மூலம்), ஆன்லைன் விவாதம் போன்றவை மூலம் நாம் பயிற்சிகளைப் பெற முடியும். 

சிறப்பான பயிற்சியை வழங்குவதற்காக தேசிய அளவில் 9 அமைப்புகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் Data Science குறித்த பயிற்சியை IIT Madras மூலம் SWAYAM-NPTEL வழங்குகிறது.  

டேட்டா சயின்ஸ் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் ரகுநாதன் ரெங்கசாமி மற்றும் சங்கர் நரசிம்மன் ஆகியோர் உங்கள் ஆர்வத்தை புரிந்து உங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். 

டேட்டா சயின்ஸ் பயிற்சி இது ஓர்  8 வார ஆன்லைன் பயிற்சியாகும். இந்த பயிற்சியில் சேர விரும்புவர்கள் SWAYAM – NPTEL இணையதளத்தின் மூலமாக உள்நுழைந்து அதிலுள்ள pre-course material-ஐ படித்துவிட்டு பயிற்சிக்குச் செல்லலாம்.   

டேட்டா சயின்ஸ் தொடர்பான அறிவுத் தளத்தைப் பெருக்க விரும்பும் எவரும் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். இதற்கென்று எந்த விதமான தனிப்பட்ட தகுதிகள் எதுவும் தேவையில்லை. 8 வார காலத்தில் டேட்டா சயின்ஸின் பலதரப்பட்ட தளங்களிலும் சென்று நாம் பயிற்சி பெற முடியும். 

பாடத்திட்டம் 

Introduce R as a programming language
Introduce the mathematical foundations required for data science
Introduce the first level data science algorithms
Introduce a data analytics problem-solving framework
Introduce a practical capstone case study 

பயிற்சி முடித்தவர்கள் பயிற்சி குறித்த சான்றிதழ்களைப் பெற விரும்பினால் அதற்காக ரூ.1000 செலுத்த வேண்டும். 

சான்றிதழ் வழங்கப்படுவதற்கு சில விதிகள் உள்ளன. அதாவது கொடுக்கப்படும் எட்டு அசைன்மென்ட்களில் ஆறு அசைன்மென்ட்டுகளில் 25 சதவீதமான மதிப்பெண்களை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பயிற்சி முடிவில் வைக்கப்படும் ஆன்லைன் தேர்வில் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

முக்கிய தேதிகள்

Last date for registering – 27 July 2020
Commencement of course – 20 July 2020
Course end – 11 September 2020
Commencement of exams – 27 September 2020 (9 AM to 12 noon, morning session, and an afternoon session from 2 PM to 5 PM) 
Data Science for Engineers

பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்பு இது. இதுவும் 8 வார காலப் பயிற்சியாகும். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 10 hrs of pre-course material-ஐ படித்து விட்டு பயிற்சியில் சேரலாம். HONEYWELL, ABB, FORD, GYAN DATA PVT. LTD போன்ற நிறுவனஙகள் இந்தப் பயிற்சிக்கான INDUSTRY SUPPORT – ஐ வழங்குகிறது. 

முக்கிய தேதிகள்:

Start Date :    20 Jul 2020
End Date :    11 Sep 2020
Exam Date :    27 Sep 2020
Enrollment Ends :    27 Jul 2020

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு NPTEL and IIT Madras லோகோ பொறிக்கப்பட்ட இ-சான்றிதழ் (e-certificate)  மட்டுமே வழங்கப்படும். அதில் தேர்வர் பெயர், புகைப்படம் மற்றும் மதிப்பெண்கள் இடம் பெற்றிருக்கும். 
வி.கே.எம்.

Source: https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/jun/09/free-training-in-data-science-3424754.html