கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்- சென்னை மாநகராட்சி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா பரிசோதனை செய்து கொண்டாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

சென்னையில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில்தான் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்கிற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது மக்களை அச்சுறுத்துவது அல்ல.

சென்னையில் நிறைய ஆய்வகங்கள் இருப்பதால் அனைவருமே பரிசோதனை செய்து கொள்ளலாம். பிற பகுதிகளில் இருந்து வருகிறவர்களை சோதனை எதுவும் செய்யாமலேயே தனிமைப்படுத்தி வருகிறோம். இதுவும் ஒரு பாதுகாப்புக்கான நடவடிக்கைதான்.

imageபிரேசிலில் ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 8,05,649 ஆக அதிகரிப்பு

கொரோனா பரிசோதனைக்கு வருகின்றவர்கள் தம்முடன் 15 நாட்களாக தொடர்பில் உள்ளவர்கள் குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சென்னையில் தனிமைப்படுத்தப்படுகிறவர்களுக்கு உதவ 6,000 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு ஆணையர் பிரகாஷ் கூறினார்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-will-implement-tough-quarantine-norms-388054.html