சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 360ஆக அதிகரிப்பு.. தனிமைப்படுத்தப்படும் தெருக்கள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 360ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும், இன்று, மட்டும் 1406 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் வீடு, தெரு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை முழுமையாக சென்னை மாநகராட்சி முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அப்பகுதியில் உள்ள அனைவரையும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவர்களை பரிசோதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது மாநகராட்சி.

imageதமிழகத்தில் தீவிரம் எடுக்கும் கொரோனா.. புதிய உச்சத்தை தொட்ட மொத்த பாதிப்பு.. இன்று 1875 கேஸ்கள்!

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. கோடம்பாக்கத்தில் 73 இடங்களும், திருவிக நகரில் 54 இடங்களும், பெருங்குடியில் 28, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 26 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

மாதவரத்தில் 20 இடங்களும், தண்டையார் பேட்டை 8, அம்பத்தூரில் 19 இடங்களும், அடையாரில் 13 இடங்களும் உள்ளன. மணலியில் 9 இடங்களும், ஆலந்தூரில் 7 இடங்களும், வளசரவாக்கத்தில், நெற்குன்றம் சக்தி நகர் என்ற 1 இடமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/the-number-of-containment-areas-in-chennai-has-increased-to-360-388029.html