சென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம்.. பொய்யான தகவல் கொடுத்து தப்பி ஓட்டம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கடந்த 19 நாட்களில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரத்தை மண்டலவாரியாக மாநகராட்சி ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இவர்கள் தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துவிட்டு தப்பிவிட்டதாகவும், அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சென்னை மாநகராட்சி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

imageஎந்த அறிகுறியும் இல்லாமல் இறந்த 7 பேர்.. தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 38 பேர் மரணம்

சென்னையில் மாயமான நோயாளிகள் பொதுமக்களுடன் கலந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளத. சில தனியார் பரிசோதனை மையங்களில் விவரங்கள் முறையாக சேர்க்கப்படவில்லை என்று கூறபப்டுகிறது. இதனால் இவர்கள் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆதார் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்படுவதால் யாரும் தப்ப முடியாத நிலை உள்ளது.

முன்னதாக தப்பிய 277 கொரோனா நோயாளிகளை தீவிரமாக தேடும் பணியில் காகவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி சைபர் கிரைம் காவல்துறையிடம் அளித்துள்ளது. இந்நிலையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/277-covid-patients-escaped-from-chennai-388274.html