சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு.. அரசு அதிரடி அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை பெருநகர் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.

அதே நேரம் கடந்த காலத்தில் முழு அங்கு உத்தரவு காலத்தின்போது எப்படியான தளர்வுகள், அத்தியாவசிய பொருட்களுக்கு வழங்கப்பட்டதோ, போன்ற பணிகளுக்கு இப்போதும், தளர்வுகள் வழங்கப்படும்.

மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படும். வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும். ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும். வீட்டிலிருந்து 2 கி.மீ சுற்றளவு உள்ள பகுதிகளில் மட்டுமே மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.

வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்துதான் செல்ல வேண்டும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் திறக்க அனுமதியில்லை.

, பதிவு இலவசம்!

அதேநேரம், 21 ஆம் தேதி, 28 ஆம் தேதி, இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. எந்த தளர்வும் இல்லை. இந்த நாட்களில் மருத்துவ அவசர நிலைக்கு தேவையான மருத்துவமனைகள், மெடிக்கல்கள், ஆம்புலன்ஸ்கள் மட்டும் இயங்கும். பிற கடைகள் எதுவும் திறக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், முதல் ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட்டதற்கு ஈடாக கெடுபிடிகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் உணவகங்களில் பார்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகள் மூடப்படுகின்றன.

imageநாளை முதல்.. சென்னையில் மதியம் 2 மணிவரைதான் கடை திறந்திருக்கும்.. வெள்ளையன் அதிரடி அறிவிப்பு

Source: https://tamil.oneindia.com/news/chennai/full-lockdown-will-be-implemented-in-chennai-388341.html