அதிரடியான பிளான்.. அடுத்த 12 நாட்கள் மிக முக்கியம்.. சென்னை லாக்டவுன் கொஞ்சம் வித்தியாசமானது ஏன்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் அமலுக்கு வந்து இருக்கும் இந்த லாக்டவுன் மிகவும் வித்தியாசமானது ஆகும்.

image

Chennai Lockdown கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?..அதிரடி Plan

எவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டாலும் சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்தபடி இருந்தது. நினைத்ததை விட வேகமாக சென்னையில் தினமும் கேஸ்கள் வந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்.

இன்று முதல் இங்கு முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும்.

imageமொத்தமாக லாக் செய்யப்பட்ட அண்ணா சாலை.. முக்கிய சாலைகள் மூடல்.. சென்னையில் தீவிர கட்டுப்பாடு!

முன்பு எப்படி இருந்தது

சென்னையில் அமலுக்கு வந்து இருக்கும் இந்த லாக்டவுன் மிகவும் வித்தியாசமானது ஆகும். முன்பு தமிழகம் முழுக்க லாக்டவுன் இருந்த போது கூட சென்னையில் மக்கள் வெளியே செல்வதும், பணிக்கு செல்வதும், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதும் நிகழ்ந்து வந்தது. சென்னையில் லாக்டவுன் விதிகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை.

கூட்டம் கூட்டமாக

சென்னையில் லாக்டவுன் இருந்த போது ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்தனர். இதனால் சென்னையில் ராயபுரம் கிளஸ்டர், பேனிக் பையிங் கிளஸ்டர், கோயம்பேடு மார்க்கெட் கிளஸ்டர் என்று நிறைய கிளஸ்டர்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்பின் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின் கொரோனா கேஸ்கள் மிக தீவிரமாக அதிகரிக்க தொடங்கியது.

ஆனால் இப்போது

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் லாக்டவுன் மிக மிக தீவிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி முன்பு போல் மக்கள் சென்னையில் வெளியே செல்ல முடியாது. சென்னை முழுக்க 400 செக் போஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் போலீசார் களத்தில் உள்ளனர்.காரில், பைக்கில் செல்லும் எல்லோரையும் பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வெளியே சென்றாலே

அதோடு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கார் மற்றும் பைக்குகளில் செல்ல கூடாது. 2 கிமீ தூரத்திற்கு மேல் இருக்கும் கடைகளுக்கு செல்ல கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே வந்தாலே போலீஸ் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக மக்கள் உள்ளேயே இருக்க வேண்டும், அவசிய தேவை தவிர எதற்கும் வெளியே வர கூடாது என்று கூறப்படுகிறது.

மிக கடுமை

நேற்று பேட்டியளித்த சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்து இருந்தார். முக்கிய காரணம் தவிர எதற்கும் வெளியே வர கூடாது. வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனால் சென்னையில் முன்பு இருந்ததை விட இந்த முறை மிக கடுமையான லாக்டவுன் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இருக்க கூடாது அலட்சியம்

மிக முக்கியமாக மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே கால் எடுத்து வைக்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். முன்பு போல் சென்னையில் ஜாலியாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு பைக்கில் செல்ல முடியாது. அடுத்த 12 நாட்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/lockdown-in-chennai-this-lockdown-is-different-from-others-why-388727.html