வுஹன் ஸ்டைல் டெஸ்டிங்.. சென்னையில் ஒரு பக்கம் லாக்டவுன்.. சோதனையில் செம மாற்றம்.. அரசு அதிரடி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் ஒரு பக்கம் தீவிரமான முழு ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா சோதனைகள் வேகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 56845 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 24822 ஆக உள்ளது. சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 39641 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள் .

imageஇதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 56845 ஆக உயர்வு!

எத்தனை சோதனை

தமிழகத்தில் இன்று 33231 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 861211 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 32186 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 821594 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது

அதிகமாகி உள்ளது

தமிழகத்தில் இன்று சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக சோதனைகள் தினமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் சென்ற நிலையில் சோதனை இருந்தது . அது தற்போது 20 ஆயிரம் என்று அதிகரிக்கப்பட்டு, தற்போது 33 ஆயிரம் என்று உயர்த்தப்பட்டுள்ளது. யாரும் நினைத்த பார்க்காத அளவிற்க்கு தமிழகத்தில் டெஸ்டிங் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகமாக உயரவில்லை

டெஸ்டிங் அதிகம் ஆக்கப்பட்டாலும் கேஸ்கள் மொத்தமாக உயரவில்லை. நேற்றை விட 300 கேஸ்கள் மட்டுமே அதிகம் வந்துள்ளது ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கிறது. இந்த சோதனையில் சென்னையில்தான் அதிகமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் செய்யப்படும் சோதனைகளில் 70%க்கும் அதிகமான சோதனைகள் சென்னையில்தான் செய்யப்பட்டு வருகிறது.

அரசின் திட்டம்

சீனாவில் அரசு வுஹனில் கொரோனாவை கட்டுப்படுத்த செய்த அதே முயற்சிகளை தற்போது சென்னையில் தமிழக அரசு செய்கிறது. வுஹனில் கொரோனா பரவல் அதிகம் ஆன போது மொத்தமாக வுஹன் மூடப்பட்டது . அதன்பின் மொத்தமாக வுஹனில் சோதனை அதிகப்படுத்தப்பட்டது. கடுமையாக ஊரடங்கு நிலவி வந்தது. நாளுக்கு நாள் அங்கு சோதனைகள் அதிகம் ஆக்கப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்டது

இதன் மூலம் வுஹனில் நாளடைவில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்தது. தற்போது அதே முறை சென்னையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக லாக்டவுன் போடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு வந்துள்ளது.12 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

அதிக கட்டுப்பாடு

தற்போது அமலுக்கு வந்திருக்கும் லாக்டவுன் மிக மிக தீவிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி முன்பு போல் மக்கள் சென்னையில் வெளியே செல்ல முடியாது. இந்த முறை கடுமையாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுக்க 400 செக் போஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் போலீசார் களத்தில் உள்ளனர்.காரில், பைக்கில் செல்லவும் எல்லோரையும் பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

செம திட்டம்

லாக்டவுன் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வுஹன் போலவே டெஸ்டிங் அதிகரிக்க முயன்று வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் தற்போது சென்னையில் தாறுமாறான வேகத்தில் டெஸ்டிங் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு + தீவிர டெஸ்டிங் என்ற இலக்குடன் தமிழக அரசு துரிதமாக செயல்பட தொடங்கி உள்ளது. நினைத்ததை விட தற்போது கொஞ்சம் குறைவான கேஸ்களே சென்னையில் வருகிறது. அதாவது டெஸ்ட்கள் உயர்த்தப்பட்டால் கேஸ்கள் ஒரே அடியாக உயரவில்லை.

வீடு வீடாக

அதிலும் சென்னையில் வீடு வீடாக கூட சோதனைகள் செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் சென்னை முழுக்க இன்னொரு பக்கம் மருத்துவ குழு வார்டு வாரியாக மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதில் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி குறித்து சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா சோதனைகளை செய்கிறார்கள். இதனால் சென்னையில் சமூக பரவல் கண்டறியப்பட்டு அது களையப்படும் என்று கூறுகிறார்கள்.

Dexamethasone விலை மலிவானது..நம்ம ஊர் மருந்துக் கடைகளில் ரொம்பப் பிரபலம்

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-tamilnadu-increases-its-testing-to-new-level-amid-lockdown-in-chennai-388888.html