கொரோனாவுக்கு சிகிச்சை- வியாசர்பாடியில் மேலும் ஒரு சித்த மருத்துவமனை – சென்னை மாநகராட்சி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மேலும் ஒரு சித்த மருத்துவமனையை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை விவரம்:

imageகாய்ச்சல் மருந்துக்கே ராம்தேவ் கம்பெனி அனுமதி பெற்றது- கொரோனாவுக்காக இல்லை- உத்தரகாண்ட் அரசு பகீர்

முழு வீச்சில் முகாம்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் பெருநகர மாநகராட்சி நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் நடத்தப்படும் பரிசோதனை மையங்கள் மற்றும் ஆய்வுப் பணிகள் மூலம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சாலிகிராமம் சித்த மருத்துவ மையம்

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கான பராமரிப்பு மையங்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய சித்த மருத்துவ முறைப்படியும் சிகிச்சை அளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 400 படுக்கை வசதிகளுடன் சாலிகிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை முறையில் கொரோனா தொற்று நோயாளிகள் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.

வியாசர்பாடியில் 2-வது சித்த மருத்துவமனை

வியாசர்பாடியில் இரண்டாவது சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று திறந்து வைத்தார். தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், வென்டிலேட்டர் உதவி தேவைப்படாத கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் என்ன வசதிகள்

இங்கு மொத்தம் 224 படுக்கை வசதி ஏற்படுத்த பட்டுள்ளதாகவும், 10 சித்த மருத்துவர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். முதல் நாள், 7வது, 14வது நாள் என அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.. இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ள நோயாளிகள் அனைவருக்கும் உணவு மற்றும் சிகிச்சை அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது என்றார். யாசர்பாடியில் அமைந்துள்ள சித்த மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு, கபசுர குடிநீர், மூலிகை தேனீர், மூலிகை ஆவிப் பிடித்தல்,மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை தினமும் வழங்கப்பட உள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-opens-2nd-siddha-care-centre-in-viyasarpadi-389290.html