36 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா.. சென்னை, மதுரை, சேலம், ராமநாதபுரம், வேலூரில் மோசம்.. முழு லிஸ்ட் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் இன்று பெரம்பலூரை தவிர அனைத்து (36) மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம், ராமநாதபுரம் வேலூர் மற்றும் திருவள்ளூரில் பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்குள் மட்டும் 3,807 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.

image1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி!

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 463
  • செங்கல்பட்டு 5648
  • சென்னை 60533
  • கோவை 561
  • கடலூர் 1081
  • தர்மபுரி 86
  • திண்டுக்கல் 507
  • ஈரோடு 176
  • கள்ளக்குறிச்சி 878
  • காஞ்சிபுரம் 2067
  • கன்னியாகுமரி 401
  • கரூர் 145
  • கிருஷ்ணகிரி 146
  • மதுரை 2858
  • நாகப்பட்டினம் 263
  • நாமக்கல் 99
  • நீலகிரி 107
  • பெரம்பலூர் 158
  • புதுக்கோட்டை 204
  • ராமநாதபுரம் 952
  • ராணிப்பேட்டை 762
  • சேலம் 946
  • சிவகங்கை 268
  • தென்காசி 368
  • தஞ்சாவூர் 455
  • தேனி 736
  • திருப்பத்தூர் 186
  • திருவள்ளூர் 3978
  • திருவண்ணாமலை 1859
  • திருவாரூர் 468
  • தூத்துக்குடி 958
  • திருநெல்வேலி 830
  • திருப்பூர் 188
  • திருச்சி 701
  • வேலூர் 1384
  • விழுப்புரம் 944
  • விருதுநகர் 538
  • விமான நிலைய கண்காணிப்பில் 398

(வெளிநாடு)

  • விமான நிலைய கண்காணிப்பில் 339

(உள்நாடு)

  • ரயில் நிலைய கண்காணிப்பில்: 410

சேலத்திலும் அதிகம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை பார்ப்போம். சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 2,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 297 பேருக்கும், செங்கல்பட்டில் 226 பேருக்கும், சேலத்தில் 162 பேருக்கும், திருவள்ளூரில் 147 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 86 பேருக்கும், ராமநாதபுரத்தில் 100 பேருக்கும், வேலூரில் 76 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் உயர்வு

கள்ளக்குறிச்சியில் 26 பேருக்கும், விருதுநகரில் 45 பேருக்கும், விழுப்பரத்தில் 23 பேருக்கும், திருவாரூரில் 13 பேருக்கும், தேனியில் 33 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 12 பேருக்கும், திருச்சியில் 31 பேருக்கும், தென்காசியில் 21 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும், கடலூரில் 8 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உயர்வு

கன்னியாகுமரியில் 30 பேருக்கும், சிவகங்கையில் 29 பேருக்கும், தஞ்சாவூரில் 7 பேருக்கும், திருப்பத்தூரில் 14 பேருக்கும், திருநெல்வேலியில் 32 பேருக்கும், திருப்பூரில் 10 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 19 பேருக்கும், அரியலூரில் ஒருவருக்கும், நாகப்பட்டினத்தில் 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 8 பேருக்கும், தர்மபுரியில் 3 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 5 பேருக்கும், கரூரில் 4 பேருக்கும், நீலகிரியில் 18 பேருக்கும், புதுக்கோட்டையில் 30 பேருக்கும், திண்டுக்கல்லில் 35 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மிக அதிகம்

தமிழகத்திலேயே ஜூன் 30ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 22,777 பேரும், செங்கல்பட்டில் 2,791 பேரும், மதுரையில் 1,941 பேரும், திருவள்ளூரில் 1,400 பேரும், காஞ்சிபுரத்தில் 1,200 பேரும், திருவண்ணாமலையில் 973 பேரும், வேலூரில் 1,035 பேரும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராமநாதபுரத்தில் 697 பேரும், தேனியில் 562 பேரும், சேலத்தில் 655பேரும், திருச்சியில் 328 பேரும், விழுப்புரத்தில் 353 பேரும், திருவாரூரில் 280 பேரும், தூத்துக்குடியில் 255 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/district-wise-covid-19-positive-cases-in-tamilnadu-on-july-1-390032.html