உலகளவில் அதிர்ச்சி தகவல்… கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

உலகளவில் கொரோனா அதிவேகமாக பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 10,992,367 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 524,177 உயிரிழந்த நிலையில் 6,150,658 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த நாட்டில் முதலில் இருப்பது வல்லரசு அமெரிக்காவே தான். அதுமட்டும் இல்லாமல் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நகரங்களில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் திகழ்கிறது. இதில், குறிப்பாக லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தையும் பரவலையும் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்துவந்தாலும் தற்போது இந்தியா உலகளவில் 4வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும், தமிழகத்தில் சென்னை முதல் இடத்திலும் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 56,021 பேர் உடல்நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரமாக சென்னை உள்ளது.

அதற்கடுத்தபடியாக டெல்லி, தானே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கவுகாத்தி பால்கர், மற்றும் ராய்காட் நகரங்கள் உள்ளன. உலகளவில் லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டெல்லி, சா பாலோ, தானே, மியாமி, பியூனஸ் அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா அதிகம் பரவும் நகரங்களாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.

Last Updated 3, Jul 2020, 3:48 PM

Source: https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/shock-information-worldwide-chennai-is-2nd-in-corona-fastest-cities-qcw1yn