கிரீன் சிக்னல்.. சென்னை டிராபிக் விதியில் அதிரடி மாற்றம்.. பின்னணி காரணம்.. தமிழகம் முழுக்க வருமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இருக்கும் சாலையில் உள்ள போக்குவரத்து சிகனல்கள் தொடர்பாக முக்கிய விதி ஒன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. முன்பு தினமும் சென்னையில் 2000+ கேஸ்கள் வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது.

சென்னையில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 72500 ஆக உள்ளது. இதில் 49587 கேஸ்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 21770 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளது.

imageதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

தளர்வு

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரம் சென்னையில் முழு லாக்டவுன் இருந்தது. சென்னை முழுக்க கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் இருந்ததது. மக்கள் அத்தியவசிய தேவையை தவிர வேறு எதற்கும் வெளியே வர கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளது.

என்ன மாற்றம்

இந்த நிலையில் சென்னையில் தற்போது தளர்வுகளுடன் லாக்டவுன் உள்ளது. இதனால் மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக வாகனங்களில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகியுள்ளது. இதனால் தற்போது சென்னையில் சாலையில் முக்கிய விதி மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

சிக்கினால் நிறம் மாற்றம்

அதன்படி சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்கப்பட உள்ளது. சென்னை முழுக்க இதை கொண்டு வர இருக்கிறார்கள். தற்போது சோதனை முறையில் இது அமலுக்கு வருகிறது. அதாவது இனி ரெட் சிக்னல் 1 நிமிடம் மட்டுமே இருக்கும். 2 -3நிமிடம் எல்லாம் இருக்காது .

எங்கு எல்லாம்

இன்று முதல் 10 போக்குவரத்து சிக்னல்களில் இதை அமல்படுத்த உள்ளனர். அதன்பின் சென்னையில் உள்ள 400 சிக்னல்களிலும் அமல்படுத்த யோசித்து வருகிறார்கள். அதன்பின் சென்னை முழுக்க கொண்டு வர பரிசீலிக்கப்படும் . பின் தமிழகம் முழுக்க கொண்டு வர பரிசீலனை செய்யப்படும்.

ஒரே இடத்தில சிக்னலில் 60 நொடிகளுக்கு அதிகமாக மக்கள் காத்திருப்பதால் அவர்களுக்கு கொரோனா பரவும் எவாய்ப்பு உள்ளது. இது பரவலை அதிகமாக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-traffic-rules-the-red-signal-reduced-to-60-seconds-in-400-singals-390851.html